"அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு உறுதி "-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழ்நாட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7 புள்ளி 5 சதவிகித உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஆளுநரின் ஒப்புதலை பெறும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட மேற்கொள்வார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி, நம்பியூர் சாவக்கட்டுபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 1154 கைத்தறி நெசவாளர்களுக்கு, மருத்துவம், மற்றும் இழப்பீடு பெற உதவும், "பாதுகாப்பு அடையாள அட்டையை" அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
Comments